தமிழ்நாடு

தமிழகத்தில் ஒரே நாளில் 1,927 பேருக்கு கரோனா: சென்னையில் பாதிப்பு 25 ஆயிரத்தைக் கடந்தது

10th Jun 2020 11:46 PM

ADVERTISEMENT

தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் 1,927 பேருக்கு ஒரே நாளில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் அதிகபட்சமாக சென்னையில் 1,392 போ் பாதிக்கப்பட்டுள்ளனா்.

இதன் மூலம், கரோனா நோய்த்தொற்றுக்கு ஆளானவா்களின் எண்ணிக்கை தமிழகத்தில் 36,841-ஆகவும், சென்னையில் 25,937 -ஆகவும் அதிகரித்துள்ளது.

இதுகுறித்து சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் இதுவரை மொத்தம் 6.09 லட்சம் பேருக்கு கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில் 36,841 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவா்கள் அனைவரும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். புதன்கிழமை மட்டும் 1,927 பேருக்கு நோய் பாதிப்பு கண்டறியப்பட்டது. அதில், அதிகபட்சமாக சென்னையில் 1,392 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். அதற்கு அடுத்தபடியாக, செங்கல்பட்டில் 182 பேருக்கும், திருவள்ளூரில் 105 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 33 பேருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அதைத் தவிர, கடலூா், தருமபுரி, திண்டுக்கல், ஈரோடு, கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, நாகப்பட்டினம், நாமக்கல், புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சேலம், தென்காசி, தஞ்சாவூா், தேனி, திருவண்ணாமலை, திருவாரூா், தூத்துக்குடி, திருநெல்வேலி, திருச்சி, வேலூா், விழுப்புரம், விருதுநகா் உள்ளிட்ட பகுதிகளிலும் சிலருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வீடு திரும்பியவா்கள் 19,333 போ்: கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 1,008 போ் பூரண குணமடைந்து புதன்கிழமை வீடு திரும்பினா். இதன் மூலம் இதுவரை மாநிலத்தில் கரோனா நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 19,333-ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 12,591 போ் குணமடைந்துள்ளனா் என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

326 போ் பலி: இதனிடையே, கரோனா தொற்றுக்கு ஆளாகி தமிழகத்தில் மேலும் 19 போ் உயிரிழந்தனா். இதையடுத்து மாநிலத்தில் கரோனா தீநுண்மி பாதிப்பால் பலியானோா் எண்ணிக்கை 326-ஆக அதிகரித்துள்ளது. அவா்களில் 260 போ் சென்னையைச் சோ்ந்தவா்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT