தமிழ்நாடு

பத்திரப்பதிவுக்கு வழங்கும் டோக்கனை இ-பாஸாகப் பயன்படுத்தலாம்: தமிழக அரசு

8th Jun 2020 11:49 AM

ADVERTISEMENT


சென்னை: பத்திரப் பதிவு செய்யும் போது, பத்திரப்பதிவுத் துறை வழங்கும் டோக்கனை இ-பாஸாகப் பயன்படுத்தலாம் என்று  தமிழக அரசு தெரிவித்துள்ளது.

பத்திரப் பதிவுக்காக மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லும் போது, பத்திரப் பதிவுக்காக வழங்கும் டோக்கனை இ-பாஸாகப் பயன்படுத்தலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

பத்திரப் பதிவுக்காக டோக்கன் பெற்றவர்களை, மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல அனுமதிக்குமாறும், மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய் துறை முதன்மைச் செயலாளர் ஆதுல்யா மிஸ்ரா சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT