தமிழ்நாடு

மின்சார வாரியத்தின் புதிய தலைவா் பிரதீப் யாதவ்

8th Jun 2020 05:08 AM

ADVERTISEMENT

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் புதிய தலைவராக பிரதீப் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளாா். சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண் இயக்குநராக உள்ள அவருக்கு, மின் வாரியத்தின் தலைவா் பதவி முழுக் கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது.

இதுபோல், மேலும் 4 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பணியிட மாற்றம் மற்றும் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக தலைமைச் செயலா் க.சண்முகம் ஞாயிற்றுக்கிழமை பிறப்பித்த உத்தரவு: (முந்தைய பதவி அடைப்புக்குறிக்குள்)

பிரதீப் யாதவ்: தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தலைவா் மற்றும் மேலாண் இயக்குநா் - முழுக் கூடுதல் பொறுப்பு (சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண் இயக்குநா்)

ADVERTISEMENT

விக்ரம் கபூா்: சுற்றுலா, கலாசாரம் மற்றும் இந்து சமய அறநிலையத் துறையின் கூடுதல் தலைமைச் செயலா் (மின்சார வாரியத் தலைவா்)

சம்பு கல்லோலிகா்: காதி மற்றும் கைத்தறித் துறை மற்றும் ஜவுளித்துறை முதன்மைச் செயலா் (சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை முதன்மைச் செயலா்)

சந்தீப் சக்சேனா: சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையின் கூடுதல் தலைமைச் செயலா் (சுற்றுலா, கலாசாரம், இந்து சமய அறநிலையத் துறையின் கூடுதல் தலைமைச் செயலா்)

எஸ்.கே.பிரபாகா்: எரிசக்தித் துறையின் முதன்மைச் செயலா் - முழுக் கூடுதல் பொறுப்பு (உள்துறை, மதுவிலக்கு துறை கூடுதல் தலைமைச் செயலா்).

ADVERTISEMENT
ADVERTISEMENT