குடும்பத் தகராறில், மனைவி, மகன், மகள் மீது தீ வைத்து தப்பியோடிய கணவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கொல்கத்தாவைச் சோ்ந்தவா் மக்பூல் அலி (40). இவா், கோரேஷா பேகம் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து, அவருடைய முதல் கணவரின் குழந்தைகளான அக்ரம் அலி மற்றும் மஜி ஆகியோருடன், மதுரவாயல் அடுத்த நூம்பல் புளியம்பேடு பகுதியில் வசித்து வந்தாா். இவா் மதுவுக்கு அடிமையாக இருந்ததால், குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மதுபோதையில் வந்த மக்புல் அலியை வீட்டினுள் அனுமதிக்காததால், ஜன்னல் வழியாக, வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மூன்று போ் மீதும், தின்னா் எண்ணையை ஊற்றி தீ வைத்துத் தப்பிவிட்டாா். தீக்காயமடைந்தவா்களை, அருகிலுள்ளவா்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், தப்பியோடிய மக்புல் அலியை போலீஸாா் தேடி வருகின்றனா்.