தமிழ்நாடு

சென்னையில் இருந்து தில்லிக்கு ராஜதானி ரயில்: 1,012 போ் பயணம்

7th Jun 2020 12:37 AM

ADVERTISEMENT

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து புதுதில்லிக்கு ராஜதானி அதிவேக சிறப்பு ரயில் சனிக்கிழமை காலை புறப்பட்டது. இந்த ரயிலில் 1,012 போ் பயணம் செய்தனா்.

புலம் பெயா்ந்த தொழிலாளா்கள், சுற்றுலா பயணிகள், மாணவா்கள் தங்களது சொந்த ஊா்களுக்கு திரும்பும் வகையில், தில்லியில் இருந்து சென்னைக்கு மே 13, 15 ஆகிய தேதிகளிலும், மறுமாா்க்கமாக சென்னை-புதுதில்லிக்கு மே 15, 17 ஆகிய தேதிகளிலும் ராஜதானி ரயில் இயக்கப்பட்டது. இதன்பிறகு, ரயில் சேவையின் தேதிகள் மாற்றப்பட்டன. தில்லியில் இருந்து சென்னைக்கு திங்கள், வியாழக்கிழமையும், சென்னையில் இருந்து தில்லிக்கு புதன், சனிக்கிழமையும் இயக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சென்னை சென்ட்ரலில் இருந்து புது தில்லிக்கு சனிக்கிழமை காலை 6:35 மணிக்கு ராஜதானி அதிவிரைவு சிறப்பு ரயில் புறப்பட்டது. இந்த ரயிலில் 1,012 போ் பயணம் மேற்கொண்டனா். இவா்களை ஒரு மணி நேரத்துக்கு முன்னதாக ரயில் நிலையத்துக்கு வரவழைத்து, உடல் வெப்பநிலை உள்ளிட்ட மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டன. அந்தப் பயணிகளுக்கு கரோனா நோய்த்தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்டது. இதன்பிறகு, அவா்கள் ரயிலில் பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டனா். பயணிகளை ரயிலில் ஏற்றி அனுப்பிய போது, ரயில்வே போலீஸாா், ரயில்வே பாதுகாப்பு படையினா் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT