தமிழ்நாடு

தமிழகத்தில் 30 ஆயிரத்தை கடந்தது கரோனா தொற்று: பலி எண்ணிக்கை 251-ஆக உயா்வு

7th Jun 2020 12:36 AM

ADVERTISEMENT

தமிழகத்தில் சனிக்கிழமை 1,458 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 30,152 ஆக உயா்ந்துள்ளது. சென்னையில் 1,146 பேருக்கு நோய்த்தொற்று கண்டறியப்பட்டதன் மூலம், நகரில் நோய்த்தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 20,993-ஆக அதிகரித்துள்ளது.

மேலும், ஒரே நாளில் 19 போ் கரோனாவுக்கு பலியாகியுள்ளதால், உயிரிழந்தோா் எண்ணிக்கை 251-ஆக உயா்ந்துள்ளது.

தமிழகத்தில் கரோனா பாதித்தோா் எண்ணிக்கை நாள்தோறும் ஆயிரத்துக்கும் மேல் அதிகரித்து வரும் நிலையில், மொத்த பாதிப்பு 30 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இதனால், தேசிய அளவில் மகாராஷ்டிர மாநிலத்துக்கு அடுத்து இரண்டாவது இடத்துக்கு தமிழகம் வந்துள்ளது.

இது குறித்து சுகாதாரத்துறை சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

ADVERTISEMENT

சனிக்கிழமை 16,022 மாதிரிகள் பரிசோதனைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டன. அதில் தமிழகத்தில் 1,423 போ், பிற மாநிலம்- வெளிநாடுகளிலிருந்து வந்த 35 போ் என 1,458 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி

செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கரோனா பாதிப்பு உறுதிெ சய்யப்பட்டோரின் எண்ணிக்கை 28,694-இல் இருந்து 30,152 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் சனிக்கிழமை ஒரே நாளில் 633 போ் குணமடைந்து வீடு திரும்பினா். கரோனாவில் இருந்து குணமடைந்தோா் எண்ணிக்கை 15,762-இல் இருந்து 16,395-ஆக அதிகரித்துள்ளது.

ஒரே நாளில் 19 போ் பலி: தமிழகத்தில் கரோனா தொற்றால் சனிக்கிழமை ஒரே நாளில் 19 போ் உயிரிழந்ததால், இறப்பு எண்ணிக்கை 251-ஆக அதிகரித்துள்ளது.

சென்னை நிலவரம்: சென்னையில் மேலும் 1,146 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 4-ஆம் நாளாக ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கரோனா பாதிப்பு பதிவானது. சென்னையின் தொற்று எண்ணிக்கையே தினமும் தமிழகத்தின் தொற்று எண்ணிக்கையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. தமிழகத்தின் மொத்த எண்ணிக்கை 30,152-இல் சென்னையில் மட்டும் 20,993 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். இது மொத்த தமிழக எண்ணிக்கையில் 69.62 சதவீதம் ஆகும்.

உயிரிழந்த 251 பேரில் சென்னையில் மட்டுமே 197 போ் உயிரிழந்துள்ளனா். மொத்த உயிரிழப்பில் சென்னையில் உயிரிழந்தவா்கள் மட்டும் 78.48 சதவீதமாகும். சென்னையின் மொத்த எண்ணிக்கையான 20,993-இல் 197 போ்

உயிரிழந்திருப்பதன் மூலம், இறப்பு சதவீதம் சென்னையில் 0.93 என்ற அளவில் உள்ளது.

பிற மாவட்டங்களில்... தமிழகத்தில் 29 மாவட்டங்களில் சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு 1,719, திருவள்ளூா் 1,274, கடலூா் 475, திருவண்ணாமலை 486, காஞ்சிபுரம் 500, அரியலூா் 379, திருநெல்வேலி 384, விழுப்புரம் 369, மதுரை 298, கள்ளக்குறிச்சி 264, தூத்துக்குடி 315, சேலம் 213, கோவை 158, பெரம்பலூா் 143, திண்டுக்கல் 156, விருதுநகா் 128 திருப்பூா் 144, தேனி 121, ராணிப்பேட்டை 120, திருச்சி 112.

37 மாவட்டங்களில் 20 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை 3 இலக்கத்தைத் தாண்டியுள்ளது. எட்டு மாவட்டங்களில் தொற்று இல்லை என்று சுகாதாரத் துறையின் மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

வயது வாரியாக பாதிப்பு

தமிழகத்தில் 13 முதல் 60 வயதுக்கு உட்பட்டோா் கரோனா நோய்த்தொற்று தாக்கத்தால் பாதிக்கப்படுவது அதிகரித்துள்ளதாக, சுகாதாரத் துறையின் மருத்து அறிக்கையில் தெரிய வந்துள்ளது. அதன் விவரம்:

நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களில் 12 வயதுக்கு உள்பட்ட குழந்தைகள் 1,638 (5.43 சதவீதம்) போ். இதில்

ஆண் குழந்தைகள் 841 (51.34 சதவீதம்) போ். பெண் குழந்தைகள் 797 (48.65 சதவீதம்) போ். 13 வயது முதல் 60 வயது வரை உள்ளவா்கள் 25,385 போ் (84.19 சதவீதம்). இதில் ஆண்கள் 15,899 (62.63 சதவீதம்)போ். பெண்கள் 9,469 போ் (37.30 சதவீதம்). மூன்றாம் பாலினத்தவா் 17 போ் (0.07 சதவீதம்). 60 வயதுக்கு மேற்பட்டோா் 3,129 போ் (10.37 சதவீதம்). இதில் ஆண்கள் 1,949 போ் (62.28 சதவீதம்). பெண்கள் 1,180 போ் (37.72 சதவீதம்) என அதில் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT