தமிழ்நாடு

இன்று மாலை 6 மணிக்கு உரையாற்றுகிறார் முதல்வர் பழனிசாமி

7th Jun 2020 02:15 PM

ADVERTISEMENT

 

தமிழகத்தில் குறிப்பாக சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை 6 மணிக்கு உரையாற்றுகிறார். 

நாடு முழுவதும் பொது முடக்கம் 5வது கட்டமாக நீட்டிக்கப்பட்டு அமலில் இருந்து வருகிறது. கரோனா அல்லாத பகுதிகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், சற்று முன்னதாக, மக்களின் முழு ஒத்துழைப்பு இல்லாமல் கரோனா பரவலைத் தடுப்பது சாத்தியமாகாது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார். 

ADVERTISEMENT

இதையடுத்து,  முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை 6 மணிக்கு தமிழக மக்களுக்கு உரையாற்ற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழகத்தில் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்படும் என்றும் முதல்வர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT