தமிழ்நாடு

திருவிக நகரில் கரோனா பாதிப்பு 2 ஆயிரத்தைத் தாண்டியது: சென்னையில் மண்டலவாரியாக விவரம்

7th Jun 2020 11:12 AM

ADVERTISEMENT

 

திருவிக நகர் மண்டலத்தில் கரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 2 ஆயிரத்தைத் தாண்டியது.

சென்னையில் சனிக்கிழமை 1,146 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, சென்னையில் கரோனாவால் பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கை 20,993 ஆக அதிகரித்துள்ளது. 

இதில் சென்னையில் மண்டலவாரியாக கரோனா தொற்று பாதித்தோர் விவரத்தை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. 

ADVERTISEMENT

அதன்படி, ராயபுரம் மண்டலத்தில், 3,717 பேரும், தண்டையாா்பேட்டை மண்டலத்தில் 2,646 பேரும், தேனாம்பேட்டை மண்டலத்தில் 2,374 பேரும், கோடம்பாக்கம் மண்டலத்தில் 2,323 பேரும், திரு.வி.க. நகா் மண்டலத்தில் 2,076 பேரும், அண்ணாநகா் மண்டலத்தில் 1,864 பேரும், அடையாறு மண்டலத்தில் 1,158 பேரும், வளசரவாக்கம் மண்டலத்தில் 1,043 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனா். 

மேலும், 10,502 போ் குணமடைந்துள்ளனா். 197 போ் உயிரிழந்துள்ளனா். 10,066 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT