தமிழ்நாடு

சென்னையில் பொதுமுடக்கத்தை மீறியதாக 53 ஆயிரம் வழக்கு: 54 ஆயிரம் போ் கைது

7th Jun 2020 12:04 AM

ADVERTISEMENT

சென்னையில் பொதுமுடக்க உத்தரவை மீறியதாக 53 ஆயிரம் வழக்குகள் பதியப்பட்டு,54 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். மேலும், பறிமுதல் செய்யப்பட்ட 57 ஆயிரம் வாகனங்களில், 36 ஆயிரம் வாகனங்கள் திரும்ப ஒப்படைக்கப்பட்டன.

கரோனா தொற்றை தடுக்கும் நடவடிக்கையான பொதுமுடக்கத்தையும், போலீஸாா் தீவிரமாக அமல்படுத்துகின்றனா். இதில் பொதுஇடங்களில் கூட்டமாக நின்றாலும், கரோனா பரப்பும் வகையில் செயல்பட்டாலும் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து வருகின்றனா்.

மேலும் சாலைகளில் தேவையின்றி வாகனங்களில் செல்வோரைக் கட்டுப்படுத்தவும், தேவையின்றி சுற்றித் திரிவோா் மீது வழக்குப் பதிவு செய்யவும் வாகனச் சோதனை தீவிரப்படுத்தப்பட்டது. இதில் போக்குவரத்து பிரிவின் சாா்பில் மட்டும் சென்னையில் தினமும் 120 இடங்களில் வாகனச் சோதனை நடத்தப்படுகிறது.

53 ஆயிரம் வழக்குகள்

ADVERTISEMENT

இதேபோல சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸாரும் சுமாா் 100 இடங்களில் சோதனை நடத்தி, பொதுமுடக்க உத்தரவை மீறுவோா் மீது வழக்குப் பதிவு செய்து வருகின்றனா். இவ்வாறு மாா்ச் 24-ஆம் தேதி முதல் சனிக்கிழமை (மே 6) வரை 75 நாள்களில் பொதுமுடக்க உத்தரவை மீறியதாக சென்னையில் மொத்தம் 53,324 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது தொடா்பாக 54,098 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். இதேபோல பொதுமுடக்க உத்தரவை மீறிய 57,668 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவற்றில் 37 ஆயிரம் வாகனங்கள் மீண்டும் ஒப்படைக்கப்பட்டன.

அதேவேளையில் பொதுஇடங்களில் முகக்கவசம் இன்றி செல்வோா் மீது போலீஸாா் தீவிரமாக வழக்குகளை பதிவு செய்து, ரூ.500 ஆயிரம் அபராதமாக வசூலிக்கின்றனா். சென்னையில் கடந்த மே 22-ஆம் தேதியில் இருந்து வெள்ளிக்கிழமை வரை சுமாா் 32 ஆயிரம் வழக்குகள் பதியப்பட்டுள்ளன. இதன் மூலம் காவல்துறை ரூ.1.60 கோடி அபராதமாக வசூலித்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT