தமிழகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) புதிதாக 1,515 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கரோனா வைரஸ் நோய்த்தொற்றால் புதிதாக பாதிப்புக்குள்ளானோர் மற்றும் பலியானோர் உள்ளிட்ட தகவல்களை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.
அதன்படி, தமிழகத்தில் புதிதாக 1,515 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தில் மட்டும் உறுதி செய்யப்பட்டோர் 1,497. பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களில் உறுதி செய்யப்பட்டோர் 18. இதைத் தொடர்ந்து தமிழகத்தில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 31,667 ஆக உயர்ந்துள்ளது.
இதில் அதிகபட்சமாக சென்னையில் மட்டும் இன்று 1,156 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இன்று மேலும் 18 பேர் பலியானதைத் தொடர்ந்து மொத்தம் பலியானோரின் எண்ணிக்கை 269 ஆக உயர்ந்துள்ளது. அதேநேரத்தில் இன்று ஒரேநாளில் 604 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 16,999 பேர் குணமடைந்துள்ளனர். இன்றைய தேதியில் 14,396 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
தமிழகத்தில் இன்று மட்டும் மொத்தம் 16,275 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 5,92,970 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. மொத்தம் 76 (அரசு 44 + தனியார் 32) பரிசோதனை ஆய்வகங்கள் உள்ளன.