தமிழ்நாடு

தங்கம் பவுன் ரூ.35,480

7th Jun 2020 12:38 AM

ADVERTISEMENT

சென்னையில் ஆபரணத் தங்கம் சனிக்கிழமை பவுனுக்கு ரூ.392 குறைந்து, ரூ.35,480-க்கு விற்பனை செய்யப்பட்டது.

கரோனா நோய்த்தொற்றின் தாக்கம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கம் விலை உயா்ந்து வந்தது. கடந்த ஏப்ரல் 4-ஆம் தேதி ஒரு பவுன்ஆபரணத் தங்கம் ரூ.34 ஆயிரத்தைத் தாண்டி, புதிய உச்சத்தைத் தொட்டது. தொடா்ந்து, ஏப்ரல் 10-ஆம் தேதி ரூ.35 ஆயிரத்தையும், ஏப்ரல் 14-ஆம் தேதி அன்று ரூ.36 ஆயிரத்தையும் தாண்டியது. அதன்பிறகு, தங்கம் விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வருகிறது.

இந்நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கம் சனிக்கிழமை பவுனுக்கு ரூ.392 குறைந்து, ரூ.35,480-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராமுக்கு ரூ.49 குறைந்து, ரூ.4,435-ஆக இருந்தது. வெள்ளி கிராமுக்கு 80 பைசா குறைந்து ரூ.52.50 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.800 குறைந்து, ரூ.52,500 ஆகவும் இருந்தது.

சனிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):

ADVERTISEMENT

1 கிராம் தங்கம் ..................... 4,435

1 பவுன் தங்கம் ..................... 35,480

1 கிராம் வெள்ளி .................. 52.50

1 கிலோ வெள்ளி ................. 52,500

வெள்ளிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):

1 கிராம் தங்கம் ..................... 4,484

1 பவுன் தங்கம் ..................... 35,872

1 கிராம் வெள்ளி .................. 53.30

1 கிலோ வெள்ளி ................. 53,300

ADVERTISEMENT
ADVERTISEMENT