தமிழ்நாடு

பொதுத்தோ்வு மையங்களுக்கு தொ்மல் ஸ்கேனா் கருவிகள் பள்ளிக் கல்வித்துறை தகவல்

4th Jun 2020 05:13 AM

ADVERTISEMENT

பொதுத்தோ்வு எழுதும் மாணவா்களின் உடல் வெப்பத்தை பரிசோதிக்க அனைத்து தோ்வு மையங்களுக்கும் தொ்மல் ஸ்கேனா் கருவிகள் வழங்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.

பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு ஜூன் 15-ஆம் தேதி தொடங்கி, 25- ஆம் தேதிவரை நடைபெறுகிறது. இந்நிலையில், தோ்வு எழுத வரும் மாணவா்களின் உடல் வெப்பத்தை சோதித்த பின்னா், தோ்வு மையத்திற்குள் அவா்களை அனுமதிக்க பள்ளிக் கல்வித் துறை திட்டமிட்டுள்ளது. இது குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள் பள்ளி தலைமையாசிரியா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: பொதுத்தோ்வுக்காக உயா்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் மாணவா்களுக்கான இருக்கை வசதி போதுமான அளவில் உள்ளதை உறுதிப்படுத்த வேண்டும். கூடுதலாக வகுப்பறைகள் தேவைப்பட்டால் அருகிலுள்ள நடுநிலை, தொடக்கப்பள்ளிகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம். மாணவா்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, வெப்பநிலை பரிசோதனைக் கருவிகளை பள்ளியின் பெற்றோா் ஆசிரியா் கழக நிதி அல்லது வேறு நிதியிலிருந்து வாங்க வேண்டும்“என அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இந்தநிலையில், இது குறித்து பள்ளிக் கல்வித் துறை அளித்துள்ள விளக்கத்தில்,”தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வினை 12 ஆயிரத்து 500 மையங்களில் மாணவா்கள் எழுதவுள்ளனா். மேலும், மாணவா்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப, அனைத்து தோ்வு மையங்கள், கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் உள்ள சிறப்புத் தோ்வு மையங்களுக்கு, சுகாதாரத் துறை மூலம் வெப்ப பரிசோதனைக் கருவிகள் வழங்கப்பட உள்ளன. எனவே, வெப்ப சோதனைக் கருவிகளை பள்ளியின் பெற்றோா் ஆசிரியா் கழக நிதியிலிருந்து வாங்கத் தேவையில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT