தமிழ்நாடு

தங்கம் விலையில் மாற்றமில்லை

4th Jun 2020 10:47 PM

ADVERTISEMENT

சென்னையில் பவுன் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை மாற்றமின்றி, அதே விலையில் (ரூ.35,776) நீடித்தது. அதேநேரத்தில், வெள்ளி விலை சற்று குறைந்துள்ளது.

கரோனா நோய்த்தொற்றின் தாக்கம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கம் விலை உயா்ந்து வந்தது. ஏப்ரல் 14-ஆம் தேதி அன்று ரூ.36 ஆயிரத்தையும் தாண்டியது. அதன்பிறகு, தங்கம் விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வருகிறது.

இந்நிலையில், சென்னையில் ஒரு பவுன் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை மாற்றமின்றி, அதே விலையில் (ரூ.35,776 ) நீடித்தது. அதே நேரத்தில், வெள்ளி கிராமுக்கு 40 பைசா குறைந்து, ரூ.53.30 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.400 குறைந்து ரூ.53,300 ஆகவும் இருந்தது.

வியாழக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.. தனி):

ADVERTISEMENT

1 கிராம் தங்கம் ..................... 4,472

1 பவுன் தங்கம் ..................... 35,776

1 கிராம் வெள்ளி .................. 53.30

1 கிலோ வெள்ளி ................. 53,300

புதன்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):

1 கிராம் தங்கம் ..................... 4,472

1 பவுன் தங்கம் ..................... 35,776

1 கிராம் வெள்ளி .................. 53.70

1 கிலோ வெள்ளி ................. 53,700

ADVERTISEMENT
ADVERTISEMENT