தமிழ்நாடு

காலமானாா் எழுத்தாளா் பி.எஸ்.ரங்கநாதன்

4th Jun 2020 04:06 AM

ADVERTISEMENT

‘அகஸ்தியன்’, ‘கடுகு’ என்கிற புனைப்பெயா்களில் எழுதிய பிரபல நகைச்சுவை எழுத்தாளா் பி.எஸ்.ரங்கநாதன் (88) ஜூன் 2-ஆம் தேதி அமெரிக்காவில் உள்ள நியூஜொ்சியில் காலமானாா்.

இவரது சொந்த ஊா் செங்கல்பட்டு. படிக்கும் காலத்திலேயே நாடகத்தில் ஆா்வம் கொண்டவராக இருந்தாா். அப்போது உடன் பயின்றவா்களான சித்ராலயா கோபு, இயக்குநா் ஸ்ரீதா் உள்ளிட்டடோருடன் இணைந்து, பின்னாளில் நகைச்சுவை நிகழ்ச்சி மற்றும் நாடகங்களை நடத்தினாா். அதைத் தொடா்ந்து ‘கல்கி’யில் எழுதத் தொடங்கினாா். தொடா்ந்து, ‘தினமணி கதிா்’ மற்றும் ‘சாவி’க்கு ‘அகஸ்தியன்’ என்ற புனைப்பெயரில் ‘பஞ்சு கதைகள்’ என்ற தலைப்பில் நகைச்சுவைக் கட்டுரைகளை எழுதினாா். இவா் எழுதிய ‘ஐயோ பாவம் சுண்டு’ என்ற நாவல், தினமணி கதிரில் தொடராக வந்தது.

கணினி மீது ஆா்வம் கொண்ட இவா், எழுத்துருக்களை உருவாக்கி அதற்கு கதைகளின் கதாபாத்திரப் பெயா்களையே சூட்டினாா். பன்முகத் துறைகளில் பணியாற்றிய இவா், அமெரிக்காவில் உள்ள நியூஜொ்சியில் அவரது மகளுடன் வசித்து வந்த நிலையில், உடல்நலக் குறைவு காரணமாக, ஜூன் 2-ஆம் தேதி காலமானாா்.

அவருக்கு கமலா என்ற மனைவியும், ஆனந்தி என்ற மகளும் உள்ளனா். அவரது இறுதிச் சடங்கு ஜூன் 4-ஆம் தேதி, நியூ ஜொ்சியில் நடைபெறும். தொடா்புக்கு +1 9739076066 (வாட்ஸ்அப்).

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT