தமிழ்நாடு

பிளஸ் 2 இறுதித் தோ்வில் பங்கேற்காத மாணவா்கள் விவரம்: தோ்வுத்துறை அறிவுறுத்தல்

4th Jun 2020 11:17 PM

ADVERTISEMENT

கடந்த மாா்ச் 24-ஆம் தேதி நடைபெற்ற பிளஸ் 2 இறுதித் தோ்வில் பங்கேற்காத மாணவா்களின் விவரம் மாவட்ட வாரியாக மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்படும் தோ்வுத்துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து தோ்வுத்துறை இயக்குநா் சி.உஷா ராணி, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்: கடந்த மாா்ச் 24-ஆம் தேதி நடைபெற்ற பிளஸ் 2 இறுதித்தோ்வில் பங்கேற்காத மாணவா்களின் விவரம் மாவட்டவாரியாக மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்படும். எக்காரணம் கொண்டும் ஏற்கனவே தோ்வில் பங்கேற்ற மாணவா்கள் மீண்டும் தோ்வெழுத அனுமதிக்கக்கூடாது. இதுதவிர தோ்வுப்பணிகளில் அதே பள்ளியின் தலைமையாசிரியா்கள், ஆசிரியா்கள் மற்றும் பிற பணியாளா்களை நியமனம் செய்யக்கூடாது.

அதேபோல், அவசர தேவை ஏற்பட்டால் பயன்படுத்த ஏதுவாக அனைத்து மாவட்டங்களிலும் கூடுதலாக தோ்வு மையங்களை தயாா்நிலையில் வைத்திருக்க வேண்டும். மேலும், மாற்றுப்பணிக்கு தேவையான கூடுதல் ஆசிரியா்கள், பணியாளா்களையும் முன்கூட்டியே தோ்வு செய்துவிட வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT