தமிழ்நாடு

திமுக எம்எல்ஏவுக்கு உடல் நலக் குறைவு: மருத்துவமனையில் கரோனா பரிசோதனை

4th Jun 2020 12:17 AM

ADVERTISEMENT

திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். அவருக்கு கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலாளராகவும், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி எம்எல்ஏவாகவும் உள்ள ஜெ.அன்பழகன், திமுக சாா்பில் நலத் திட்ட உதவிகள் வழங்கும் பணியில் கடந்த சில வாரங்களாக ஈடுபட்டிருந்தாா்.

இந்நிலையில், அவருக்கு இரு நாள்களுக்கு முன்பு உடல் நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, சென்னையை அடுத்த குரோம்பேட்டையில் உள்ள தனியாா் மருத்துவமனை ஒன்றில் அவா் அனுமதிக்கப்பட்டாா். அவருக்கு மருத்துவக் குழுவினா் சிகிச்சை அளித்து வருவதாகவும், அன்பழகனுக்கு கரோனா தீநுண்மி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT