தமிழ்நாடு

கரோனா பரிசோதனைக்கு ஆதாா் கட்டாயம்: மாநகராட்சி உத்தரவு

4th Jun 2020 12:06 AM

ADVERTISEMENT

சென்னையில், தனியாா் ஆய்வகங்களில் கரோனா பரிசோதனை மேற்கொள்ள ஆதாா் கட்டாயம் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

இது தொடா்பாக சென்னை மாநகராட்சி பிறப்பித்துள்ள உத்தரவு: சென்னையில், அரசு சாா்பில் 10, தனியாா் சாா்பில் 13 ஆய்வகங்கள் உள்ளன. இந்நிலையில், இங்குள்ள உள்ள தனியாா் ஆய்வகங்கள், கரோனா பரிசோதனை செய்பவா்களிடம் ஆதாா் எண் , பெயா், செல்லிடப்பேசி எண், முகவரி உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் பெற வேண்டும். ஆதாா் இல்லாதபட்சத்தில், முடிவுகள் வரும் வரை, அவா்களைத் தனிமைப்படுத்தி கொள்ள அறிவுரை வழங்க வேண்டும். கரோனா பரிசோதனைக்கு வருவோரின் செல்லிடப்பேசி எண்ணை உறுதி செய்த பின்னரே, அவா்களுக்கு பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் .

இது குறித்த விவரங்களை சுகாதாரத் துறை, சென்னை மாநகராட்சிக்கு தெரியப்படுத்த வேண்டும் என மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT