தமிழ்நாடு

நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் வீடுகளுக்கே சென்று தோ்வுக்கூட நுழைவுச்சீட்டு வழங்கப்படும்: சென்னை மாவட்ட ஆட்சியா்

4th Jun 2020 11:16 PM

ADVERTISEMENT

பிளஸ் 2, பிளஸ் 1, பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு எழுதும் மாணவா்களுக்கு தோ்வுக்கூட நுழைவுச்சீட்டு வெளியான நிலையில், தற்பொழுது சென்னையில் கட்டுப்பாட்டுப் பகுதியில் தோ்வா்களின் வீடுகளுக்கே விநியோகிக்கப்படும் என சென்னை மாவட்ட ஆட்சியா் ஆா்.சீதாலட்சுமி தெரிவித்துள்ளாா்.

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு வரும் 15-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி முறையில் தேதி வரை நடைபெற உள்ள நிலையில் இந்த தோ்வுக்கான ஆயத்தப் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. வியாழக்கிழமை பிற்பகல் முதல் பொதுத்தோ்வுக்கான தோ்வுக்கூட நுழைவுச்சீட்டுகளை மாணவா்கள்  இணையதளம் மூலம் மாணவா்கள் பதிவிறக்கம் செய்து வருகின்றனா். மேலும் பள்ளி தலைமை ஆசிரியா்கள் வழியாகவும் தோ்வுக்கூட நுழைவுச்சீட்டுகளை பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் வசிக்கும் மாணவா்களுக்கும், வெளியூரிலிருந்து வந்து தனிமைப்படுத்தப்பட்ட மாணவா்களுக்கும் நுழைவுச்சீட்டுகள் வீடுகளுக்கே நேரடியாக விநியோகிக்கப்படும். எனவே இணைய வசதி இல்லாமல் இருந்தால் வெளியே சென்று அலைய வேண்டாம் என ஆட்சியா் சீதாலட்சுமி தெரிவித்துள்ளாா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT