தமிழ்நாடு

திருவாவடுதுறை ஆதீனத்தில் ஆன்மிக நூல் வெளியீட்டு விழா

31st Jul 2020 01:29 PM

ADVERTISEMENT


குத்தாலம்: மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டம் திருவாவடுதுறை ஆதீனத்தில் மயிலாடுதுறை ஆன்மிகப் பேரவை சார்பில் தொகுத்தளித்த காக்க காக்க கனகவேல் காக்க கந்தசஷ்டி கவசம் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. 

விழாவில் திருவாவடுதுறை ஆதீனம் 24-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் காக்க காக்க கனகவேல் காக்க கந்த சஷ்டி கவசம் நூலை வெளியிட முதல் பிரதியை ஏவிசி கல்வி நிறுவனங்களின் செயலாளர் கார்த்திகேயன் பெற்றுக்கொண்டார்.  

விழாவில் மயிலாடுதுறை ஆன்மிகப் பேரவை நிறுவனர் வழக்குரைஞர் டாக்டர் ராம. சேயோன், ஏவிசி பொறியியல் கல்லூரி இயக்குநர் டாக்டர் செந்தில்முருகன், ஏவிசி தொழில்நுட்பக் கல்லூரி இயக்குநர் பேராசிரியர் வளவன், குத்தாலம் ஒன்றிய குழு துணைத்தலைவர் முருகப்பா, கருப்பூர் ஊராட்சி மன்றத்தலைவர் செந்தில்குமார், திருவாவடுதுறை ஆதீன காசாளர் சுந்தரேசன், திருவாவடுதுறை திருக்கோவில் கண்காணிப்பாளர் சண்முகம் பிள்ளை, திருவிடைமருதூர் திருவாவடுதுறை ஆதீன உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் ஞானமூர்த்தி ,
ஆதீன புலவர் குஞ்சிதபாதம், ஆசிரியர்கள் மகாலிங்கம், ஜெயசீலன் மற்றும் ஆதீன பணியாளர்கள்  கலந்துகொண்டார்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT