தமிழ்நாடு

நீதிமன்றங்களைத் திறக்கக் கோரி வழக்குரைஞர்கள் ஆர்ப்பாட்டம்

31st Jul 2020 01:09 PM

ADVERTISEMENT


அவிநாசி: அனைத்துத் துறைகளையும் போல நீதிமன்றங்களையும் உரிய பாதுகாப்புடன் திறக்கக் கோரி அவிநாசியில் வழக்குரைஞர்கள் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கரோனா பொது முடக்க காலத்தில் குற்றவியல் சட்டத் திருத்தங்கள் செய்ய அமைத்துள்ள கமிட்டியை உடனடியாக கலைக்க வேண்டும். அனைத்துத் துறைகளையும் போல, நீதிமன்றங்களையும் உரிய பாதுகாப்புடன் திறக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்குரைஞர் சங்கங்களின் கூட்டுக்குழு(ஜேஏஏசி) சார்பில் அவிநாசி குற்றவியல் நடுநர் நீதிமன்றம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு துணைத் தலைவர் வி.கே.சுப்பிரமணியன் தலைமை வகித்தார். வழக்குரைஞர் ஆர்.பி.கனகராஜ் முன்னிலை வகித்தார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT