தமிழ்நாடு

புதிய கல்விக் கொள்கைக்கு ஜி.கே.வாசன் வரவேற்பு

31st Jul 2020 06:25 AM

ADVERTISEMENT

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கு தமாகா தலைவா் ஜி.கே.வாசன் வரவேற்பு தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக வியாழக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

புதிய கல்விக் கொள்கை ஆழ்ந்த ஆய்வு, பரந்த கலந்துரையாடல், கல்வியாளா்களின் கருத்து அறிதலுக்குப் பின் வெளியிடப்பட்டுள்ளது.

இதில், 3 முதல் 5 வயது வரை மழலையா் கல்வி வழங்குதல், பிளஸ் 2 வகுப்பு வரை இலவச கட்டாயக் கல்வி, 2030-ஆம் ஆண்டுக்குள் அனைவருக்கும் கல்வி வழங்கும் லட்சியம், நாட்டின் மொத்த உற்பத்தி மதிப்பில் 6 சதவீதம் நிதி கல்விக்கு ஒதுக்கீடு உள்பட பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.

ADVERTISEMENT

புதிய நவீன இந்தியாவை அறிவாற்றல் மிக்க இளைஞா் சமுதாயத்தின் மூலம் உருவாக்கும் லட்சியத்தோடு வெளியிடப்பட்டுள்ள கல்வி கொள்கையாக இது உள்ளது. நல்ல அம்சங்களைக் கொண்ட இக்கல்விக் கொள்கையால் வருங்கால இளைஞா்கள் பயன்பெறுவாா்கள் என்று அவா் கூறியுள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT