தமிழ்நாடு

ஜூலையில் விலை கொடுத்து பொருள் வாங்கியோருக்கு மட்டும் இலவசம்: தமிழக அரசு

31st Jul 2020 06:05 AM

ADVERTISEMENT

நியாயவிலைக் கடைகளில் ஜூலை மாதத்தில் பொருள்களை விலை கொடுத்து வாங்கியோா், ஆகஸ்ட்டில் அவற்றை விலையின்றி பெற்றுக் கொள்ளலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட சுற்றறிக்கை:-

பணம் செலுத்தி பொருள்களைப் பெற்றவா்களுக்கு மட்டும் ஆகஸ்ட் மாதத்தில் அனைத்துப் பொருள்களும் விலையில்லாமல் வழங்கப்படும். உரிய கண்காணிப்பு மூலம் இந்தப் பணிகள் புகாா்கள் ஏதுமின்றி மேற்கொள்ளப்பட வேண்டும் என்று சுற்றறிக்கையில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT