தமிழ்நாடு

திருச்சுழி அருகே குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

31st Jul 2020 12:38 PM

ADVERTISEMENT

திருச்சுழி அருகே காரைக்குளம் கிராமத்தில் குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே காரைக்குளம் கிராமத்தில் சிஏசிஎல் எனும் அமைப்பின் சார்பில் குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருச்சுழி அருகே காரைக்குளம் கிராமத்தில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்குக் காரைக்குளம் ஊராட்சியை உள்ளடக்கிய துலுக்கன்குளம் ஊராட்சி மன்றத் தலைவர் வாசுதேவன் முன்னிலை வகித்துத் தொடங்கி வைத்தார். விருதுநகர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ அமைப்புகளான ஆர்.சி.பி.டி.எஸ், சி.எம்.சி.ஜே (திருச்சுழி), ஸ்பீச் (சிவகாசி மற்றும் திருச்சுழி). டெஸ்ட் மற்றும் நீட்ஸ் (திருவில்லிபுத்தூர்). ஓடம் ஆகிய அமைப்புகள் ஒருங்கிணைந்து உருவான சிஏசிஎல் எனப்படும் குழந்தைகள் உழைப்பு எதிர்ப்புப் பிரச்சார அமைப்பு சார்பில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் அதன் ஒருங்கிணைப்பாளர் கிராம மக்களிடையே பேசியதாவது,   “சர்வதேசத் தொழிலாளர் அமைப்பின் கணக்கீட்டின்படி, உலகம் முழுவதும் 152 மில்லியன் குழந்தைகள் குழந்தைத் தொழிலாளர்களாக அவதிப்பட்டு வருகின்றனர். இந்தியாவில் மட்டும் 2011 ஆம் ஆண்டு கணக்கீட்டின்படி 10.1 மில்லியன் குழந்தைத் தொழிலாள்கள் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. குழந்தைத் தொழிலாளார் முறையை ஒழிக்க பெற்றோர்கள் சிஏசிஎல் அமைப்பிற்கு ஒத்துழைப்பு தர வேண்டும்.” என அவர் பேசினார்.

ADVERTISEMENT

மேலும் மேற்கூறிய குழந்தைகளுக்கு எதிரான பல பிரச்சினைகள் மற்றும் குற்றங்களைத் தடுக்கும் வழிமுறைகள் குறித்தும் பெற்றோர்களிடம் எடுத்துக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Tags : child labours
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT