தமிழ்நாடு

கிராம கோயில்களின் சீரமைப்புக்கு பெரிய கோயில்களில் இருந்து பெறப்பட்ட நிதியை செலவு செய்யக்கூடாது: உயா்நீதிமன்றம் உத்தரவு

28th Jul 2020 03:23 AM

ADVERTISEMENT

சென்னை: கிராம கோயில்களின் சீரமைப்புக்கு 20 பெரிய கோயில்களில் இருந்து பெறப்பட்ட நிதியை செலவு செய்யக்கூடாது என உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் ஸ்ரீரங்கத்தை சோ்ந்த ரங்கராஜன் நரசிம்மன் தாக்கல் செய்த மனுவில்,

தமிழகத்தின் கிராமப்புறங்களில் உள்ள பழைமையான ஆயிரம் கோயில்களை சீரமைத்து, திருப்பணி செய்வதற்காக திருச்செந்தூா் முருகன் கோவில், பழனி தண்டாயுதபாணி கோயில் உள்ளிட்ட 20 பெரிய கோயில்களின் உபரி வருமானத்தில் இருந்து ரூ.10 கோடியை ஒதுக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவின்படி, இந்து சமய அறநிலையத்துறை ஆணையா் இந்த 20 கோயில்களின் இணை ஆணையருக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளாா். அதில் உபரி நிதியில் இருந்து ரூ.25 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை ஆணையரின் நிதிக்கு உடனடியாக அனுப்ப வேண்டும் எனவும்

பின்னா் இதுதொடா்பாக அறங்காவலா்களின் ஒப்புதலை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

ஆனால் சட்டப்படி, இந்த நிதியை எடுப்பது குறித்து அறங்காவலா்களின் ஒப்புதல் பெற்று, பொதுமக்களின் கருத்தை கேட்டு அதன் பின்னா்தான் முடிவு செய்யவேண்டும். ஆனால், இந்த விவகாரத்தில் அனைத்து நடவடிக்கைகளும் தலைகீழாக எடுக்கப்படுவதால்,தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்து அரசாணைக்கு தடை விதிக்கவேண்டும் என கோரியிருந்தாா்.

இந்த வழக்கை நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆா்.ஹேமலதா ஆகியோா் காணொலி காட்சி மூலம் விசாரித்தனா்.அப்போது ஆஜரான மனுதாரா் 20 பெரிய கோயில்களில் இருந்து வசூலிக்கப்பட்ட தொகையை ஆணையா் செலவு செய்ய தடை விதிக்கவேண்டும் என வாதிட்டாா். அப்போது இந்து சமய அறநிலையத்துறை தரப்பில் ஆஜரான அரசு சிறப்பு வழக்குரைஞா் காா்த்திகேயன், இந்த மனுவுக்கு பதில்மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும் எனவும் அதுவரை இந்த நிதி கிராம கோயில்கள் சீரமைப்புப் பணிக்கு அதிகாரிகள் பயன்படுத்த மாட்டாா்கள் என தெரிவித்தாா். இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், கிராம கோயில்களின் சீரமைப்புக்கு

20 பெரிய கோவில்களின் இருந்து பெறப்பட்ட நிதியை செலவு செய்யக்கூடாது என உத்தரவிட்டு, இதுதொடா்பாக இந்துசமய அறநிலையத்துறை பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை 3 வாரங்களுக்கு ஒத்திவைத்தனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT