தமிழ்நாடு

சங்ககிரியில் வாடகைக் கார், வேன் ஓட்டுநர்களுக்கு  இலவச ஹோமியோபதி மாத்திரைகள் வழங்கல்

DIN

சங்ககிரியில் வாடகைக் கார், சுற்றுலா வேன் ஓட்டுநர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி தன்மையுடைய ஹோமியோபதி மாத்திரைகள் இலவசமாக வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 

சேலம் மாவட்டம், சங்ககிரியில் சங்ககிரி பப்ளிக் சேரிடபுள் டிரஸ்ட், சங்ககிரி இன்னர்வீல் சங்கத்தின் சார்பில் பாளையங்கோட்டை ஹோமியோபதி மருத்துவர் துரைராஜ் வழங்கிய  நோய் எதிர்ப்பு சக்தி தன்மையுடையை ஹோமியோபதி மாத்திரைகளை டிரஸ்ட் தலைவர் ஏ.ஆனந்தகுமார், இன்னர்வீல் சங்கத்தலைவி இந்திராணி கார்த்திகேயன் ஆகியோர் தலைமையில் சங்ககிரி நகரில் தடை செய்யப்பட்டுள்ள பகுதிகளில் கார், சுற்றுலா வேன்களை நிறுத்தி வாடகைகளுக்கு  சென்று வரும் ஓட்டுநர்களுக்கு இலவசமாக வழங்கி அதனை எவ்வாறு உட்கொள்வது குறித்து விளக்கிப் பேசினர். 

டிரஸ்ட்  துணைத் தலைவர் எம்.பாலகிருஷ்ணன், செயலர் ஆர்.ராகவன், பொருளாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி,  நிர்வாகிகள் எஸ்.கணேஷ், ஆர்.கார்த்திகேயன், எம்.முரளி, ஆர்.கார்த்திகேயன், பொறியாளர் வேல்முருகன், கிஷோர்பாபு, பி.முருகேசன்,  தொழிலதிபர் அஹமத்கோயா, ராமநாதன் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தமிழகத்தில் 1 மணி நிலவரம்: 40.05 % வாக்குகள் பதிவு!

யுவன் இசையில் ‘ஸ்டார்’ படத்தில் மெல்லிசை பாடல்!

காந்திநகரில் அமித்ஷா வேட்புமனு தாக்கல்!

நம்பிக்கையை தகர்க்கும் 'இரண்டு இளவரசர்கள்': யாரைச் சொல்கிறார் மோடி

SCROLL FOR NEXT