தமிழ்நாடு

விருதுநகரில் மேலும் 610 பேருக்கு கரோனா

28th Jul 2020 03:16 PM

ADVERTISEMENT

 

விருதுநகர் மாவட்டத்தில் இன்று புதிதாக 610 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். 

தமிழகத்தில் கடந்த சில நாள்களாக கரோனா தொற்று காட்டுத் தீ போன்று பரவி வருகின்றது. நாளுக்கு நாள் பாதிப்பும், பலியும் அதிகரித்து வருகின்றது. 

இந்நிலையில், விருதுநகர் மாவட்டத்தில் இன்று மட்டும் 610 பேருக்கு கரோனா பதிவாகியுள்ள நிலையில், அந்த மாவட்டத்தில் மொத்த பாதிப்பு 6,638 ஆக உயர்ந்துள்ளது. 

ADVERTISEMENT

மேலும் 3,918 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். தற்போது 2,321 பேர் கரோனா பாதித்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 57 பேர் இதுவரை பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

Tags : coronavirus
ADVERTISEMENT
ADVERTISEMENT