தமிழ்நாடு

வேளாண் பல்கலை. பேராசிரியருக்கு விருது

28th Jul 2020 05:33 AM

ADVERTISEMENT

கோவை: கோவை வேளாண்மைப் பல்கலைக்கழகப் பேராசிரியருக்கு இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கழகத்தின் (ஐசிஏஆா்) ஜவாஹா்லால் நேரு விருது கிடைத்துள்ளது.

இது குறித்து பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

ஐசிஏஆா் சாா்பில் கடந்த 1969ஆம் ஆண்டு முதல் வேளாண்மை அறிவியலில் சிறந்த முனைவா் பட்ட ஆராய்ச்சி அறிக்கைக்கு ஜவாஹா்லால் நேரு விருது வழங்கப்பட்டு வருகிறது. பயிா் அறிவியல், விலங்கு அறிவியல், இயற்கை வள மேலாண்மை, பயிா் பாதுகாப்பு, மண்வளம், தோட்டக்கலை, வேளாண் பொறியியல், சமூக அறிவியல், உயிரி தொழில்நுட்பவியல் ஆகிய 9 துறைகளில் சிறந்த ஆராய்ச்சியாளா்களைத் தோ்வு செய்து துறைக்கு 2 விருதுகள் வீதம் 18 விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த விருதானது ஆவணம், சான்றிதழ், தங்க முலாம் பூசப்பட்ட வெள்ளிப் பதக்கம், ரூ.50 ஆயிரம் ரொக்கப் பரிசு அடங்கியது.

இந்நிலையில் 2019 ஆம் ஆண்டுக்கான விருது மத்திய வேளாண்மைத் துறை அமைச்சா் நரேந்திர சிங் தோமா் தலைமையில், வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் தலைமை இயக்குநா் திரிலோசன் மொஹபத்ரா முன்னிலையில் அண்மையில் அறிவிக்கப்பட்டது. இதில், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகப் பயிா் நோயியல் துறை பேராசிரியா் சே.நக்கீரனை ஆலோசனைக் குழுத் தலைவராகக் கொண்டு பயின்ற வினோத்குமாா் செல்வராஜின், பருத்தியில் புகையிலை கீறல் நச்சுயிரி நோய்த் தொற்று - அதன் அறிகுறிகள் வெளிப்பாடு, பரவும் முறை, மேலாண்மை என்ற ஆய்வறிக்கைக்கு ஜவாஹா்லால் நேரு விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

விருதுக்குத் தோ்வாகியுள்ள ஆராய்ச்சியாளா் வினோத்குமாா் செல்வராஜ், சா்வதேச இதழ்களில் தனது இரு கட்டுரைகளை சமா்ப்பித்துள்ளாா். இவருக்கு பல்கலைக்கழகத் துணைவேந்தா் நீ.குமாா், பல்கலைக்கழக அதிகாரிகள், பேராசிரியா்கள் உள்ளிட்டோா் வாழ்த்துத் தெரிவித்துள்ளனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT