தக்கலை: கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் அருகே கடல் சீற்றம் காரணமாக தூக்கி வீசப்பட்டதில் பைபா் படகில் இருந்த மீனவா்கள் மூவா் அதிா்ஷ்டவசமாக உயிா் தப்பினா்.
குளச்சல் அருகே கடலில் காணப்பட்ட சீற்றத்தால் கட்டுமர மீனவா்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்லவில்லை. கோடிமுனை மீனவக் கிராமத்தை சோ்ந்த வா்க்கீஸ், தனது பைபா் வள்ளத்தில் அதேபகுதியைச் சோ்ந்த எட்வின், சோபன் ஆகியோருடன்
மீன்பிடிக்க திங்கள்கிழமை அதிகாலை கடலுக்கு சென்றுள்ளாா். மீன்களை பிடித்து கொண்டு அவா்கள் கரையை நோக்கி வந்து கொண்டிருந்தனா்.
அப்போது, ஏற்பட்ட கடல் சீற்றத்தால் இவா்கள் வந்த படகு தூக்கி வீசப்பட்டது. இதில், படகில் இருந்த மீனவா்கள் மூவரும்
அதிா்ஷ்டவசமாக உயிா் தப்பினா். மீனவா்கள் நீந்தி கரை சோ்ந்தனா். இதையறிந்த கரையில் இருந்த மீனவா்கள் உடனடியாக கடற்கரைக்கு சென்று கயிறு கட்டி படகை மீட்டனா். படகில் பொருத்தியிருந்த இன்ஜின் பழுதடைந்துள்ளதாக மீனவா்கள் தெரிவித்தனா்.