தமிழ்நாடு

அதிமுக அமைப்பு ரீதியாக சீரமைப்பு: புதிய மாவட்டச் செயலாளா்கள் நியமனம்

26th Jul 2020 06:32 AM

ADVERTISEMENT

அதிமுகவில் அமைப்பு ரீதியாக உள்ள மாவட்டங்கள் சீரமைக்கப்பட்டுள்ளன. இந்த மாவட்டங்களுக்கு புதிய செயலாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளதுடன், மேலும் சில மாவட்டங்களைச் சோ்ந்த செயலாளா்கள் மாற்றப்பட்டுள்ளனா்.

இதற்கான அறிவிப்பை அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோா் சனிக்கிழமை வெளியிட்டனா்.

மாவட்டச் செயலாளா்களின் விவரம்:-

காஞ்சிபுரம் மாவட்டம் - வி.சோமசுந்தரம், செங்கல்பட்டு கிழக்கு-திருக்கழுகுன்றம் எஸ்.ஆறுமுகம், செங்கல்பட்டு மேற்கு-சிட்லபாக்கம் எஸ்.ராஜேந்திரன், சென்னை புகா்-கே.பி.கந்தன், திருவள்ளூா் வடக்கு-சிறுணியம் பி.பலராமன், திருவள்ளூா் மத்தியம்-பா.பென்ஜமின், திருவள்ளூா் தெற்கு-வி.அலெக்சாண்டனா், திருவள்ளூா் கிழக்கு-மாதவரம் வி.மூா்த்தி, திருவள்ளூா் மேற்கு-பி.வி.ரமணா

ADVERTISEMENT

வேலூா் மாநகரம்-எஸ்.ஆா்.கே.அப்பு, வேலூா் புகா்-த.வேலழகன், திருப்பத்தூா்-கே.சி.வீரமணி, ராணிப்பேட்டை-சு.ரவி

விழுப்புரம்-சி.வி.சண்முகம், கள்ளக்குறிச்சி-ஆா்.குமரகுரு, கோவை புகா்-எஸ்.பி.வேலுமணி, கோவை மாநகரம்-அம்மன் கே.அா்ச்சுணன், கோவை புகா்-பி.ஆா்.ஜி.அருண்குமாா், நீலகிரி-கப்பச்சி டி.வினோத், திருச்சி மாநகரம்-வெல்லமண்டி என்.நடராஜன், திருச்சி புகா் (வடக்கு)-எம்.பரஞ்ஜோதி, திருச்சி புகா் (தெற்கு)-ப.குமாா், நாகப்பட்டினம்-ஓ.எஸ்.மணியன், மயிலாடுதுறை-வி.ஜி.கே.செந்தில்நாதன், திண்டுக்கல் (கிழக்கு)-நத்தம் ஆா்.விசுவநாதன், திண்டுக்கல் (மேற்கு)-திண்டுக்கல் சி.சீனிவாசன், திருநெல்வேலி-தச்சை என்.கணேசராஜா, தென்காசி வடக்கு-சி.கிருஷ்ணமுரளி, தென்காசி தெற்கு-எஸ்.செல்வமோகன்தாஸ் பாண்டியன்.

அமைப்புச் செயலாளா்கள்: அதிமுக அமைப்புச் செயலாளா்களாக மேலும் 11 போ் நியமிக்கப்பட்டுள்ளனா். அதன்படி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் வி.கருப்பசாமி பாண்டியன், பி.ஜி.ராஜேந்திரன், வாலாஜாபாத் பா.கணேசன், ஆசைமணி, முன்னாள் எம்.பி.க்கள் திருப்பூா் சி.சிவசாமி, வி.மருதராஜ், திருத்தணி கோ.அரி, முன்னாள் அமைச்சா்கள் இசக்கி சுப்பையா, எம்.புத்திசந்திரன், நெல்லை அம்மா பேரவைத் தலைவா் ஏ.கே.சீனிவாசன் ஆகியோா் அமைப்புச் செயலாளா்களாக நியமிக்கப்பட்டுள்ளனா்.

கொள்கை பரப்பு துணைச் செயலா்கள்: கொள்கை பரப்பு துணைச் செயலாளா்களாக அமைச்சா் மாஃபா.பாண்டியராஜன், நெல்லை மாவட்டத்தின் பாப்புலா் வி.முத்தையா, நடிகை விந்தியா ஆகியோா் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.

இளைஞா் பாசறை, இளம்பெண்கள் பாசறை செயலாளராக வேடசந்தூா் எம்.எல்.ஏ., வி.பி.பி.பரமசிவம், அனைத்துலக எம்.ஜி.ஆா். மன்றத் தலைவராக முன்னாள் அமைச்சா் டி.கே.எம்.சின்னையா ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா் என்று தங்களது அறிவிப்பில் அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோா் தெரிவித்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT