தமிழ்நாடு

பூர்வீக சொத்தை அரசு எடுத்துக்கொள்வதில் எங்களுக்கு உடன்பாடில்லை: ஜெ.தீபா

25th Jul 2020 05:24 PM

ADVERTISEMENT

பூர்வீக சொத்தை அரசு எடுத்துக்கொள்வதில் எங்களுக்கு உடன்பாடில்லை என்று ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ஜெயலலிதாவின் வேதா இல்லத்திற்கான மதிப்பீடு தொகை ரூ.68 கோடி என்பது தவறானது. அரசின் நடவடிக்கையை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஜெயலலிதாவால் வாங்கப்பட்ட கடனுக்கு நாங்கள் பொறுப்பேற்றுள்ளோம். இல்லத்திற்குள் எங்களை அனுமதிக்கவே இல்லை. ஜெயலலிதா குடும்ப நிகழ்ச்சிகள் அனைத்தும் வேதா இத்தத்தில்தான் நடந்தன. பூர்வீக சொத்தை அரசு எடுத்துக்கொள்வதில் எங்களுக்கு உடன்பாடில்லை. 

ஜெயலலிதாவின் வாரிசாக எங்களை நீதிமன்றமே அறிவித்துள்ள நிலையில் எங்களுக்கே உரிமை உள்ளது. இல்லத்தில் உள்ள பொருள்களை அரசு நீதிமன்றத்தில் ஒப்படைத்திருக்க வேண்டும். வேதா இல்லத்தில் இருந்த பொருள்களை பட்டியலிட வேண்டும். எம்ஜிஆர் தாம் வாழ்ந்த இல்லத்தை குடும்பத்துக்குதான் விட்டுச் சென்றார். ஜெயலலிதாவின் வேதா இல்லம் மக்களுக்கு போய் சேராது. இது எங்கள் பூர்வீக சொத்து. ஜெயலலிதா பெயரில் அறக்கட்டளை தொடங்க எங்களை அணுகியிருந்தால் நாங்கள் ஒப்புதல் அளித்திருப்போம்.

ஜெயலலிதா வீட்டை அரசுடைமையாக்குவதை எதிர்த்து உச்சநீதிமன்றம் வரை சென்று தடை கேட்பேன். இவ்வாறு அவர் கூறினார். ஜெயலலிதாவின் நினைவு இல்லத்தில் முதல்வரின் முகாம் அலுவலகம் எதுவும் அமைக்கப்படாது. சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவு நடைமுறைக்கு சாத்தியமில்லை என்பதால், முகாம் அலுவலகம் எதுவும் அமைக்கப்படாது என்றும் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. வேதா இல்லத்தை நினைவில்லமாக்க, நிலத்தைக் கையகப்படுத்துவதற்கான இழப்பீட்டுத் தொகையை சென்னை குடிமையியல் நீதிமன்றத்தில் தமிழக அரசு செலுத்தியைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றுவதற்கு, நிலம் கையகப்படுத்துவதற்கான இழப்பீடாக தமிழக அரசு ரூ.68.9 கோடியை செலுத்தியுள்ளது. போயஸ் தோட்ட இல்லத்தை நினைவிடமாக மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அவரது அண்ணன் மகன் மற்றும் மகள் வழக்குத் தொடர்ந்திருக்கும் நிலையில், நிலத்தைக் கையகப்படுத்துவதற்கான இழப்பீட்டுத் தொகையை சென்னை சிவில் நீதிமன்றத்தில் தமிழக அரசு செலுத்தி உள்ளது.
 

Tags : JDeepa
ADVERTISEMENT
ADVERTISEMENT