தமிழ்நாடு

பிளஸ் 2 தேர்வு எழுதாத மாணவர்களுக்கு ஜூலை 27இல் மறுதேர்வு

25th Jul 2020 03:27 PM

ADVERTISEMENT

திருப்பூர் மாவட்டத்தில் பனிரெண்டாம் வகுப்புத் தேர்வு எழுதாத மாணவர்களுக்கு வரும் திங்கள்கிழமை 12 மையங்களில் மறுதேர்வு நடைபெறவுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் கடந்த மார்ச் 24 ஆம் தேதி பிளஸ் 2 வேதியியல், கணக்குப்பதிவியல் மற்றும் புவியியல் பாடத் தேர்வுகளை எழுத முடியாதவர்களுக்கு வரும் திங்கள்கிழமை மறுதேர்வு நடைபெறவுள்ளது.

இதுகுறித்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “பனிரெண்டாம் வகுப்பு மறுத்தேர்வினை மாணவர்கள் பயின்ற பள்ளிகளிலேயே எழுதப் போதிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
தனித்தேர்வர்களைப் பொறுத்தவரையில் ஏற்கெனவே பிற தேர்வுகளை எழுதிய தனித்தேர்வு மையங்களிலேயே தேர்வுகள் நடைபெறுகிறது.

மேலும், கரோனா நோய்த் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேர்வு அறைகளில் கிருமி நாசினி தெளிக்கப்படுவதுடன், மாணவர்கள் பயன்படுத்த கிருமிநாசிகளும் வைக்கப்பட்டுள்ளது.” எனத் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

Tags : +2 Exam
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT