தமிழ்நாடு

தமிழகம் முழுவதும் நாளை தளர்வுகள் இன்றி முழு ஊரடங்கு

25th Jul 2020 12:49 PM

ADVERTISEMENT


தமிழகம் முழுவதும் நாளை ஞாயிற்றுக்கிழமை எந்த தளர்வுகளும் இன்றி முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் முதன்முதலில் கடந்த மார்ச் மாதம் 21-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஒருநாள் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது.  அதைத் தொடர்ந்து மார்ச் 24-ஆம் தேதி மாலை 6 மணி முதல் பொது ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதைத்தொடர்ந்து பல்வேறு கட்டங்களாக பல தளர்வுகளுடன் ஊரடங்கு நீடிக்கப்பட்டு வந்தது எனினும் வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்தே வருகிறது.

தமிழகத்தில் ஜூலை முதல் வாரத்துடன் பொது முடக்கம் தளர்த்தப்பட்டாலும், ஜூலை 31-ஆம் தேதி வரை ஞாயிற்றுக்கிழமைகளில் பொது முடக்கம்  நீடிக்கப்பட்டது. இதனால் ஞாயிற்றுக்கிழமை அன்று தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு எந்தவித தளர்வுமின்றி முழுமையாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் நாளை தமிழகம் முழுவதும் தளர்வுகள் இன்றி முழுப் பொது முடக்கம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இன்று காய்கறி மற்றும் இறைச்சி, மீன் சந்தைகளில் ஏராளமான கூட்டம் அலைமோதுகிறது.

ADVERTISEMENT

 ஜூலை மாதத்தின் கடைசி ஞாயிறு என்பதால் இது கடைசி ஊரடங்கு நாளாகவும் இருக்கலாம் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்துள்ளது.

எனினும், தமிழகத்தில் நாளுக்கு நாள் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை அதிகரித்து ஒரே நாளில் கரோனா பாதிப்புக்கு உள்ளாவோரின் எண்ணிக்கை தற்போது 6 ஆயிரத்தைக் கடந்து வருகிறது மக்களிடையே பெரும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT