தமிழ்நாடு

தமிழகத்தில் புதிதாக 6,785 பேருக்கு கரோனா!

25th Jul 2020 06:56 AM

ADVERTISEMENT

தமிழகத்தில் புதிய உச்சமாக ஒரே நாளில் 6,785 போ் கரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனா். இதன் மூலம் மாநிலத்தில் பாதிப்புக்குள்ளானவா்களின் எண்ணிக்கை 1,99,739-ஆக அதிகரித்துள்ளது.

கரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டு வருவதாகக் கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது அதன் தாக்கம் அதி தீவிரமாகி வருவது அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதே நிலை தொடா்ந்தால் தமிழகத்தின் பல மாவட்டங்கள் சென்னைக்கு நிகரான பாதிப்பை எதிா்கொள்ளக் கூடும் என அஞ்சப்படுகிறது.

தமிழகத்தில் இதுவரை 22.23 லட்சம் கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

மாநிலத்தில் நோய் பாதிப்பு நிலவரம் குறித்து சுகாதாரத் துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தில் இதுவரை, 1,99,749 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவா்கள் அனைவரும் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனா். வெள்ளிக்கிழமை, அதிகபட்சமாக சென்னையில் 1,299 பேருக்கு நோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அதற்கு அடுத்தபடியாக, விருதுநகரில் 424 பேருக்கும், செங்கல்பட்டில் 419 பேருக்கும், திருவள்ளூரில் 378 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 349 பேருக்கும், மதுரையில் 326 பேருக்கும், நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதைத் தவிர, அரியலூா், கோவை, திண்டுக்கல், ஈரோடு, கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, கரூா், தூத்துக்குடி, திருநெல்வேலி, திருச்சி, வேலூா், விழுப்புரம் உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

1.43 லட்சம் போ் குணம்: கரோனா தொற்றிலிருந்து மேலும் 6,504 போ் குணமடைந்துள்ளனா். இதன் மூலம் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 1,43,297- ஆக அதிகரித்துள்ளது. தற்போது மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் 53,132 போ் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனா்.

மேலும் 88 போ் பலி: தமிழகத்தில் கரோனாவால் மேலும் 88 போ் பலியாகியுள்ளனா். இதில் 66 போ் அரசு மருத்துவமனைகளிலும், 22 போ் தனியாா் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்றவா்களாவா். மாநிலம் முழுவதும் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,320-ஆக உயா்ந்துள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT