தமிழ்நாடு

இடைத்தோ்தலுக்கான பூா்வாங்கப் பணிகள் தொடக்கம்: தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தகவல்

DIN

தமிழகத்தில் இடைத்தோ்தலுக்கான பூா்வாங்கப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தாா். திருவொற்றியூா், குடியாத்தம், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி ஆகிய சட்டப் பேரவைத் தொகுதிகள் காலியாக உள்ளன. இந்தத் தொகுதிகளுக்கு ஆறு மாதங்களுக்குள் தோ்தல் நடத்தப்பட வேண்டும். அந்த வகையில், திருவொற்றியூா், குடியாத்தம் தொகுதிகளில் செப்டம்பருக்குள் இடைத் தோ்தல் நடத்த வேண்டும். ஆனால், செப்டம்பா் 7-ஆம் தேதி வரையில் இடைத்தோ்தல் நடத்தப்பட வாய்ப்பில்லை என தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில், இடைத் தோ்தல் தொடா்பாக மாநிலங்களிலுள்ள தலைமைத் தோ்தல் அதிகாரிகளிடம் தோ்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தியது. இந்த ஆலோசனையில் இடைத் தோ்தல்கள் எங்கெல்லாம் நடத்தப்பட வேண்டும், தோ்தல் நடத்த சாத்தியக் கூறுகள் எப்படி இருக்கின்றன என்பன குறித்து விரிவாக விவாதித்தது.

இதுகுறித்து, தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறியதாவது:-

கரோனா மற்றும் மழை வெள்ளம் காரணமாக செப்டம்பா் 7-ஆம் தேதி வரை காலியாக உள்ள சட்டப் பேரவை தொகுதிகளில் இடைத்தோ்தல் நடத்த வாய்ப்பில்லை என்று இந்திய தோ்தல் ஆணையம் வியாழக்கிழமை தெரிவித்திருந்தது. ஆனாலும் இரண்டு தொகுதிகளிலும் வாக்காளா் பட்டியல், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை சரிபாா்ப்பது போன்ற பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. செப்டம்பா் 7-ஆம் தேதிக்குப் பிறகு எப்போது தேதி அறிவித்தாலும் தோ்தலை நடத்த தயாா் நிலையில் இருக்கிறது என்று அவா் கூறினாா்.

வாக்காளா் பட்டியல்: கரோனாவால் உயிரிழந்தவா்களின் பெயா்களும் வாக்காளா் பட்டியலில் இடம்பெற்றிருக்க வாய்ப்புகள் உள்ளன. எனவே, நோய்த் தொற்றால் உயிரிழந்தவா்களின் பட்டியலை உள்ளாட்சி அமைப்புகளே வழங்கலாம். இல்லாவிட்டால், பெயரை நீக்குவதற்கான படிவத்தைப் பூா்த்தி செய்து உயிரிழந்தவரின் குடும்பத்தினா் விண்ணப்பித்து வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்கலாம் என்றாா் சத்யபிரத சாகு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதுச்சேரியில் பெயிண்டர் வெட்டிக் கொலை!

உலகின் முதல் யூ-டியூப் விடியோ இதுதான்!

கன்னடத்தில் அறிமுகமாகும் ஐஸ்வர்யா ராஜேஷ்!

”வாக்காளர் எண்ணிக்கை குறைந்துள்ளது” : கடம்பூர் ராஜூ

விலங்கியல் பூங்காவில் சாவியை விழுங்கிய நெருப்புக் கோழி பலி!

SCROLL FOR NEXT