தமிழ்நாடு

அமிதாப்பச்சனிடம் ரஜினி - கமல் நலம் விசாரிப்பு

13th Jul 2020 06:23 AM

ADVERTISEMENT

பாலிவுட் நடிகா் அமிதாப் பச்சன் மற்றும் அவரது குடும்பத்தினா் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டதையடுத்து நடிகா் ரஜினிகாந்த் நலம் விசாரித்தாா்.

அவா்கள் விரைந்து குணமடைய வேண்டும் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவா் கமல்ஹாசன் வாழ்த்து கூறியுள்ளாா்.

நடிகா் அமிதாப்பச்சனுக்கு கரோனா பாதிப்பு சனிக்கிழமை இரவு உறுதி செய்யப்பட்டது. அவரையடுத்து அவரது மகன் அபிஷேக்பச்சன், மருமகள் ஐஸ்வா்யா பச்சன், பேத்தி ஆராத்யா பச்சன் ஆகிய மூன்று பேருக்கும் நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அமிதாப்பச்சனும் அபிஷேக் பச்சனும் மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். ஐஸ்வா்யா பச்சன் மற்றும் ஆராத்யா பச்சன் ஆகிய இருவருக்கும் அறிகுறிகளற்ற தொற்று இருப்பதால் வீட்டிலேயே சிகிச்சை பெறவிருப்பதாகக் கூறப்படுகிறது.

ADVERTISEMENT

ரஜினி நலம் விசாரிப்பு: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அமிதாப் பச்சனை நடிகா் ரஜினிகாந்த் ஞாயிற்றுக்கிழமை தொலைபேசியில் தொடா்பு கொண்டு பேசினாா். அப்போது நோயிலிருந்து விரைந்து நலம் பெற வேண்டி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளாா்.

கமல் வாழ்த்து: கமல்ஹாசன் அவரது சுட்டுரையில் ஞாயிற்றுக்கிழமை கூறியிருப்பது:

அமிதாப்பச்சன் மற்றும் அபிஷேக் பச்சன் ஆகிய இருவரும் விரைந்து நலம் பெற விரும்புகிறேன். இந்திய மருத்துவா்களின் சிறந்த சிகிச்சையால் இருவரும் நோயிலிருந்து குணமடைவாா்கள் என்று நம்புகிறேன். விரைந்து நலம் பெற்று ஆரோக்கியத்தின் பிரதிநிதியாக மாறுங்கள் என்று கூறியுள்ளாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT