தமிழ்நாடு

தமிழகத்தில் புதிதாக 4,328 பேருக்கு கரோனா; மேலும் 66 பேர் பலி

13th Jul 2020 06:06 PM

ADVERTISEMENT

தமிழகத்தில் இன்று புதிதாக 4,328 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு 1,42,798 ஆக உயர்ந்துள்ளது. 

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கரோனா பாதிப்பு விவரங்களை தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் இன்று புதிதாக 4,328 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் தமிழகத்தில் மட்டும் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் 4,270 பேர். வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து வந்தவர்களில் இன்று தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் 58 பேர். இதைத் தொடர்ந்து தமிழகத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 1,42,798 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் அதிகபட்சமாக இன்று 1,140 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னையில் பாதிப்பு 78,573 ஆக அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT

இன்றைய அறிவிப்பில் மேலும் 66 பேர் (அரசு மருத்துவமனை -50, தனியார் மருத்துவமனை -16) பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மொத்தம் பலியானோர் எண்ணிக்கை 2,032 ஆக உயர்ந்துள்ளது.

அதேசமயம் இன்று மட்டும் 3,035 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 92,567 பேர் குணமடைந்துள்ளனர். இன்றைய தேதியில் 48,196 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்று மட்டும் 44,560 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 16,54,008 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இன்றைய தேதியில் அரசு ஆய்வகங்கள் 53, தனியார் ஆய்வகங்கள் 52 என மொத்தம் 105 கரோனா பரிசோதனை ஆய்வகங்கள் உள்ளன.

Tags : coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT