தமிழ்நாடு

நாகப்பட்டினத்திலிருந்து ஈரோட்டுக்கு வந்த ஆயிரம் மூட்டை நெல்

13th Jul 2020 02:49 PM

ADVERTISEMENT

 

நாகப்பட்டினத்திலிருந்து ஆயிரம் நெல் மூட்டைகள் ஈரோட்டுக்கு கொண்டுவரப்பட்டது. 

ஈரோடு மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் கடை மூலம் பொருள்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதற்கான நெல் அரிசி பருப்பு சர்க்கரை போன்றவை வெளி மாநிலம் வெளி மாவட்டங்களிலிருந்து ரயில் மூலம் ஈரோடு கொண்டு வரப்படுகிறது. 

இன்று நாகப்பட்டினத்திலிருந்து சரக்கு ரயில் மூலம் 20 பெட்டிகளில் ஆயிரம் மூட்டை நெல் ஈரோட்டுக்குக் கொண்டுவரப்பட்டது. 

ADVERTISEMENT

அங்கிருந்து லாரிகள் மூலம் ஈரோடு நுகர்பொருள் வாணிப கழக குகனுக்குக் கொண்டு செல்லப்படுகிறது. பின்னர் பொது வினியோக திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகள் மூலம் பொது மக்களுக்கு வினியோகம் செய்யப்பட உள்ளது

Tags : paddy
ADVERTISEMENT
ADVERTISEMENT