தமிழ்நாடு

நாச்சியாபுரம் காவல் நிலையத்தில் துணை சார்பாய்வாளர் உள்ளிட்ட 4 பேருக்கு கரோனா

11th Jul 2020 05:21 PM

ADVERTISEMENT

 

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே நாச்சியாபுரம் காவல்நிலையத்தில் காவல் துணை சார்பாய்வாளர்கள் உள்ளிட்ட 4 காவலர்களுக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

திருப்பத்தூர் அருகேயுள்ள நா்ச்சியாபுரம் காவல் நிலையத்தில் சிறப்புக் காவல் துணை ஆய்வாளர்கள் இருவர் மற்றும் தலைமைக் காவலர் ஒருவர், எழுத்தர் ஒருவருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டதில் நால்வரும் தனிமைப் படுத்தப்பட்டனர்.

காவல் நிலையத்திற்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது. திருப்பத்தூர் நகர் காவல் துணை கண்காணி்ப்பாளர் அண்ணாத்துரை மற்றும் சுகாதாரத்துறையினர் காவல் நிலையத்தை ஆய்வு மேற்கொண்டனர்.

ADVERTISEMENT

தொடர்ந்து 24 மணி நேரத்திற்கு காவல் நிலையத்தி்ற்குள் யாரும் செல்ல வேண்டாம் எனத் அறிவுறுத்தப்பட்டது. காவலர்கள் காவல் நிலையத்திற்கு வெளியே உள்ள மரத்தடியில் அமர்ந்து அவசரப் புகார்கள் குறித்து மட்டும் பணி மேற்கொண்டனர்.

காவல் நிலையம் மற்றும் வெளிப்புர பகுதிகள் அதனைச் சுற்றியுள்ள வீதிகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு பிளீச்சிங் பவுடர் தூவப்பட்டுள்ளது.

Tags : coronavirus
ADVERTISEMENT
ADVERTISEMENT