தமிழ்நாடு

சென்னையில் தங்கம் விலை ஒரு சவரன் ரூ.30,976-க்கு விற்பனை

28th Jan 2020 12:24 PM

ADVERTISEMENT

 

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமையான இன்று சற்று விலை குறைந்து விற்பனை செய்யப்படுகிறது. 

சர்வதேச சந்தையில் தங்கத்தின் மதிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. 

அதன்படி, சென்னையில் செவ்வாய்க் கிழமையான (ஜன.28)இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.10 குறைந்து, ரூ.3,872க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கம் விலை ரூ.80 குறைந்து ரூ.30,976க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

ADVERTISEMENT

அதேசமயம் வெள்ளியின் விலையும் சற்று அதிகரித்து விற்பனையாகிறது. சில்லறை விற்பனையில் ரூ.40 காசுகள் அதிகரித்து ஒரு கிராம் ரூ.50.80க்கும், கட்டி வெள்ளி கிலோவுக்கு 50.800-க்கும் விற்கப்படுகிறது. 

செவ்வாய்க்கிழமை விலை நிலவரம் 

1 கிராம் தங்கம் ................. 3,872

1 சவரன் தங்கம் ................. 30,976

1 கிராம் வெள்ளி ............... 51.80

1 கிலோ வெள்ளி .............. 51,800

திங்கள்கிழமை விலை நிலவரம் 

1 கிராம் தங்கம் ..................... 3,882

1 சவரன் தங்கம் ..................... 31,056

1 கிராம் வெள்ளி .................. 51.40

1 கிலோ வெள்ளி ................. 51,400

Tags : gold rate
ADVERTISEMENT
ADVERTISEMENT