முல்லைப்பெரியாறு அணையில் பருவநிலை மாறுதலை முன்னிட்டு அணையின் உறுதித் தன்மையை மத்திய தலைமைக் கண்காணிப்புக் குழு திங்கள்கிழமை ஆய்வு செய்து வருகின்றனர்.
பிரதான அணை, பேபி அணை, சுரங்க வாய்க்கால் மற்றும் 13 மதகுகளை மத்தியக் குழுவினர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இக்குழுவில் மத்திய நீர்வள ஆணைய செயற்பொறியாளர் குல்சன்ராஜ், தமிழக பொதுப்பணித்துறை முதன்மைச் செயலர் மணிவாசகம், கேரள நீர்ப்பாசனத்துறை செயற்பொறியாளர் அசோக் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.