தமிழ்நாடு

பட்டா கத்தியால் கேக் வெட்டிய மணமகன் கைது

28th Jan 2020 04:18 PM

ADVERTISEMENT

சென்னை திருவேற்காடு பகுதியில் திருமண நிகழ்ச்சியின்போது பட்டா கத்தியால் கேக் வெட்டிய மணமகனை போலீசார் கைது செய்தனர்.

சென்னை திருவேற்காடு பகுதியில் பச்சையப்பன் கல்லூரியின் முன்னாள் மாணவர் ஒருவருக்கு அண்மையில் திருமணம் நடைபெற்றது. அப்போது திருமண நிகழ்ச்சிக்கு வந்த மணமகனின் உடன் பயின்றவர்கள் பட்டா கத்தியை கொடுத்து மணமகனிடம் கேக் வெட்ட சொல்கின்றனர்.

தொடர்ந்து பட்டா கத்தியுடன் மிரட்டும் வகையில் நடனமும் அவர்கள் ஆடுகின்றனர். இச்சம்பவம் திருமணத்துக்கு வந்திருந்தவர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை கிளப்பியது.

இதற்கிடையே கோயம்பேட்டில் உள்ள மாமியார் வீட்டுக்கு விருந்துக்கு வந்த மணமகனை திருவேற்காடு போலீசார் கைது செய்துள்ளனர். இதுதொடர்பாக மேலும் சிலரையும் போலீசார் தேடி வருகின்றனர்.  
 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT