தமிழ்நாடு

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீது 2 அவதூறு வழக்குகள்

28th Jan 2020 05:49 PM

ADVERTISEMENT

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீது சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 2 அவதூறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

முதல்வருக்கும், தமிழக அரசுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் அவதூறு பேசியதாக மு.க.ஸ்டாலின் மீது சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் 2 அவதூறு வழக்குகள் இன்று தொடரப்பட்டுள்ளன. 

முதல்வர் எடப்பாடி பழனிசாமி சார்பில் வழக்கறிஞர் கௌரி அசோகன் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த மனுக்களை தாக்கல் செய்துள்ளார். மனுவில், ஸ்டாலினை அவதூறு சட்டப் பிரிவுகளின் கீழ் தண்டிக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது. 

இம்மனுக்கள் விரைவில் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT