தமிழ்நாடு

தமிழக மீனவர்கள் 11 பேருக்கு பிப்ரவரி 11ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்

28th Jan 2020 04:47 PM

ADVERTISEMENT

இலங்கை கடற்படையால் கைதுசெய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 11 பேருக்கும் பிப்ரவரி 11ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.

நெடுந்தீவு அருகே மீன்பிடித்த மீனவர்களில் ராமேஸ்வரத்தை சேர்ந்த 11 பேரை எல்லைதாண்டி மீன்பிடித்தாக இலங்கை கடற்படை அண்மையில் கைது செய்தது. இதையடுத்து கைதான 11 மீனவர்களும் ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். 

அப்போது மீனவர்கள் 11 பேருக்கும் பிப்ரவரி 11ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பத்தது. இதைதொடர்ந்து மீனவர்கள் அனைவரும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

சிறைக்கு அனுப்பும் முன் மீனவர்கள் 11 பேருக்கும் கரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதா என்கிற பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

ADVERTISEMENT


 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT