தமிழ்நாடு

சீனாவில் பயிலும் மாணவர்களை அழைத்து வர தமிழக அரசு நடிவடிக்கை எடுக்க வேண்டும்: இரா.முத்தரசன்

28th Jan 2020 03:49 PM

ADVERTISEMENT

சீனாவில் பயிலும் மாணவர்களை பாதுகாப்பாக அழைத்து வர தமிழக அரசு நடிவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில், உலகத்தை உலுக்கிக் கொண்டிருக்கும் ‘கரோனா வைரஸ்’ நோய் தாக்குதலில் சீனாவில் மனித உயிரிழப்புகள் தொடர்கின்றன. இந்த நோய் பல்வேறு நாடுகளுக்கும் பரவி வருவதால் உலக நாடுகள் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்திய அரசின் வெளியுறவுத் துறையும், சீனாவில் உள்ள இந்தியர்கள் சுற்றுலாச் சென்றவர்கள், தொழிரீதியான பணிகளில் சென்றவர்கள், உயர்கல்வி பயிலச் சென்றவர்கள் என அனைவரையும் பத்திரமாக மீட்கும் நடவடிக்கையை தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டிலிருந்து சென்ற 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் சீனாவில் மருத்துவம் படித்து வருகிறார்கள்.

இவர்களின் நிலை என்ன? என்பது குறித்து இதுவரை எந்த அமைப்பும் விசாரிக்கவில்லை என்றும், அங்கு தங்கி பயிலும் மாணவர்கள் மத்தியில் பதட்டமும், பரிதவிப்பும் ஏற்பட்டிருக்கிறது என்றும் செய்திகள் வருகின்றன. 

ADVERTISEMENT

இது குறித்து தமிழ்நாடு அரசு, மத்திய வெளியுறத்துறையோடு தொடர்பு கொண்டு, தமிழ்நாட்டில் இருந்து சீனா சென்றுள்ள மாணவர்கள் அனைவரையும் பத்திரமாக நாட்டுக்கு அழைத்து வரவும், ‘கரோனா’ நோய்த் தடுப்பு நடவடிக்கை முடிந்த பிறகு அங்கு அனுப்பி வைக்கவும் உரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டுமென இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு வலியுறுத்துகிறது. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT