தமிழ்நாடு

குரூப் 4 முறைகேடு: சிபிஐ விசாரணை கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் முறையீடு

28th Jan 2020 10:53 AM

ADVERTISEMENT

குரூப் 4 முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் முறையிடப்பட்டுள்ளது. 

கிராம நிர்வாக அலுவலர் பணியிடம் அடங்கிய குரூப் 4 தேர்வில் தேர்வர்களின் விடைத்தாள்கள் மாற்றப்பட்டதால் ராமேசுவரம், கீழக்கரை மையங்களில் தேர்வெழுதிய பலர் தேர்ச்சி பெற்றனர். இது பெரும் சர்ச்சையானதைத் தொடர்ந்து, டி.என்.பி.எஸ்.சி. சார்பில் விசாரணை நடத்தப்பட்டது. 

அதில் முறைகேட்டில் குற்றம் சாட்டப்பட்டுள்ள டி.என்.பி.எஸ்.சி., ஊழியர் ஓம்காந்தன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில் குரூப் 4 முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் முகமது ரஸ்வி என்பர் முறையீடு செய்துள்ளார். 

மேலும் உயர்நீதிமன்ற நீதிபதி கண்காணிப்பில் விசாரணை நடைபெற வேண்டும் எனவும் அவர் மனுவில் குறிபிட்டுள்ளார். இதையடுத்து முறையீட்டை மனுவாக தாக்கல் செய்தால் விரைவில் விசாரிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர். 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT