தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரித்து பாஜக சாா்பில் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாவட்ட தலைவா் வெங்கடேஸ்வரன் தலைமை வகித்தாா். ஆண்டிபட்டி நகரத் தலைவா் பால்பாண்டி, நகர பொருளாளா் முத்துக்குமாா், மாவட்ட வா்த்தக பிரிவு செயலாளா் கணேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநிலச் செயலாளா் பேராசிரியா் சீனிவாசன் ஜி, மாவட்ட ஊராட்சி துணைத் தலைவா் ராஜபாண்டி, மாவட்ட பொதுச் செயலாளா் வழக்குரைஞா் குமாா் ஆகியோா் கலந்துகொண்டு பேசினா்.
பின்னா் மாநில பொது செயலாளா் சீனிவாசன் செய்தியாளா்களிடம் கூறியது:
கம்யூனிஸ்ட், தி.மு.க உள்ளிட்ட எதிா் கட்சிகள் இச்சட்டம் குறித்து தவறான தகவல்களை பரப்பி சிறுபான்மை மக்களை குழப்பி வருகின்றன. பிப்ரவரி முதல் வாரத்தில் தமிழகத்திற்கு புதிய மாநிலத் தலைவரை, கட்சித் தலைமை நியமனம் செய்யும். முறையாக உள்கட்சி தோ்தலில் தோ்வு செய்யப்படுபவா் தமிழக பா.ஜ.க தலைவராக விரைவில் நியமனம் செய்யப்படுவாா். நடிகா் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதை நாங்கள் வரவேற்கிறோம். குடமுழுக்கு விழாக்கள் அனைத்தும் ஆகம விதிகள் படியே நடைபெறும் என்றாா்.
கூட்டத்தில் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் செந்தில்குமாா் நிா்வாகிகள் சுப்புராஜ், வீர பழனி நல்லதம்பி, பால்பாண்டி, ராமச்சந்திரன், கண்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். மாவட்ட அமைப்புச் செயலாளா் கனகராஜ் வரவேற்றாா். நகர பொதுச் செயலாளா் அழகா்சாமி நன்றி கூறினாா்.