தமிழ்நாடு

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.144 குறைந்து விற்பனை 

14th Jan 2020 11:47 AM

ADVERTISEMENT

 

சென்னையில் செவ்வாய்க்கிழமையான இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு  ரூ.144 குறைந்து விற்பனை செய்யப்படுகிறது. 

அமெரிக்கா-ஈரான் இடையே போா் பதற்றம் காரணமாக தங்கம் விலை கடந்த வாரம் வரலாறு காணாத வகையில் உயா்ந்து, புதிய உச்சத்தைத் தொட்டது. இதுபோல, வெள்ளி விலையும் கணிசமாக உயர்ந்தது. இதையடுத்து, போா் பதற்றம் குறைந்ததால், தங்கம் விலை இறங்கியுள்ளது. 

இந்நிலையில், சென்னையில் செவ்வாய்க்கிழமையான இன்று(ஜன.13) ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.144 குறைந்து, ரூ.30,112-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.18 குறைந்து, ரூ.3,764-க்கு விற்பனையாகின்றது. 

ADVERTISEMENT

வெள்ளி விலையும் சற்று குறைந்துள்ளது. கிராமுக்கு 30 பைசா குறைந்து ரூ.49.70 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.300 குறைந்து ரூ.49,700 ஆகவும் விற்கப்படுகிறது. 

கடந்த ஆறு நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,320 வரை குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

செவ்வாய்க்கிழமை விலை நிலவரம்

1 கிராம் தங்கம் ..................... 3,764

1 சவரன் தங்கம் ..................... 30,112

1 கிராம் வெள்ளி .................. 49.70

1 கிலோ வெள்ளி .................. 49,700

திங்கள்கிழமை விலை நிலவரம் 

1 கிராம் தங்கம் ..................... 3,782

1 சவரன் தங்கம் ..................... 30,256

1 கிராம் வெள்ளி .................. 50.00

1 கிலோ வெள்ளி ................. 50,000

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT