தமிழ்நாடு

காணும் பொங்கல்: சென்னையில் சுற்றுலா தளங்களுக்கு சிறப்புப் பேருந்துகள்

14th Jan 2020 11:29 AM

ADVERTISEMENT

 

சென்னை: காணும் பொங்கலை முன்னிட்டு சென்னையில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவது குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

காணும் பொங்கலை முன்னிட்டு, சிறப்புப் பேருந்துகள் இயக்கம் குறித்து மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் கோ.கணேசன் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், 2020-ஆம் ஆண்டு காணும் பொங்கலை முன்னிட்டு, 17.01.2020 அன்று சென்னை மாநகரின் சுற்றுலா தளங்களை காண வரும் பொதுமக்களின் வசதிக்காக, அண்ணா சதுக்கம், வண்டலூர் உயிரியல் பூங்கா, வி.ஜி.பி. கோவளம், மாமல்லபுரம், கிஷ்கிந்தா, குயின்ஸ்லேண்ட், பெசன்ட் நகர், பிராட்வே, தாம்பரம், திருவான்மியூர், எம்.ஜி.எம்., முட்டுக்காடு (படகு குழாம்), கிண்டி சிறுவர் பூங்கா மற்றும் சுற்றுலாப் பொருட்காட்சி நடைபெறும் தீவுத் திடல் ஆகிய இடங்களுக்கு 480 சிறப்புப் பேருந்துகள், சென்னை மாநகரின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் இயக்கப்பட உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT