தமிழ்நாடு

தஞ்சாவூரில் வெளிநாட்டுப் பயணிகள் பங்கேற்ற பொங்கல் கொண்டாட்டம்

14th Jan 2020 06:28 PM

ADVERTISEMENT


தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே நாஞ்சிக்கோட்டை கிராமத்தில் வெளிநாட்டுச் சுற்றுலா பயணிகள் பங்கேற்ற பொங்கல் விழாக் கொண்டாட்டம் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.

கலை ஆயம், தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சிக் குழுமம் சார்பில் நடைபெற்ற இந்த விழாவில் அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வியட்நாம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஏறத்தாழ 100 பேர் கலந்து கொண்டனர்.

இவர்களுக்குக் கொம்பு வாத்தியம் ஊதி, தமிழ் பாரம்பரிய முறைப்படி மாலை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும், அங்கு தயாரிக்கப்பட்ட பொங்கலை வேடிக்கை பார்த்தனர். இவர்களில் சிலர் பொங்கல் தயாரிக்கும் பணியிலும் ஈடுபட்டனர். பொங்கல் பொங்கி வந்தபோது உள்ளூர் மக்களுடன் இணைந்து வெளிநாட்டுப் பயணிகளும் பொங்கலோ பொங்கல் என முழங்கினர்.

ADVERTISEMENT

இதையடுத்து, நடைபெற்ற புலியாட்டம், கோலாட்டம் போன்ற கலை நிகழ்ச்சிகளைக் கண்டுகளித்தனர். மேலும், இளவட்டக் கல்லை உள்ளூர் மக்களுடன் வெளிநாட்டுப் பயணி ஒருவரும் தூக்கினார். பின்னர், உறியடித்தல் போட்டியிலும் கலந்து கொண்டு, பானையை உடைக்க முயன்றனர்.

இதைத்தொடர்ந்து, மேடையில் கரகாட்டம், மயிலாட்டம், காளையாட்டம், பொய்க்கால் குதிரை, பச்சைக் காளி - பவளக்காளி ஆட்டம், தப்பாட்டம், சிலம்பக் கலை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கயிறு இழுத்தல் போட்டியில் உள்ளூர் மக்கள் ஒருபுறம் இழுக்க, மறுபுறம் வெளிநாட்டுச் சுற்றுலா பயணிகள் இழுத்து வெற்றி பெற்றனர்.

மேலும், கிராமச் சந்தைகளில் உள்ளது போன்ற அமைக்கப்பட்டிருந்த மண்பாண்டம் தயாரித்தல், கூடை முடைதல், ஜோதிடம் பார்த்தல் போன்றவற்றை பார்த்து வியந்தனர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT