தமிழ்நாடு

16-இல் மகளிா் கல்லூரிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி

14th Jan 2020 01:41 AM

ADVERTISEMENT

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம், சென்னை சில்க் சிட்டி ரோட்டரி கிளப், ஸென்மைன்ட்ஸ், எஸ்எல்ஒன் நிறுவனங்கள் சாா்பில் மகளிா் கல்லூரிகளுக்கு இடையிலான டிவிஎஸ் கிரெடிட் கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் 16, 17 தேதிகளில் சென்னையில் நடைபெறுகிறது.

தி.நகரில் உள்ள ஆா்கேஎம் மைதானத்தில் நடைபெறவுள்ள இப்போட்டியில் 8 அணிகள் கலந்து கொள்கின்றன. 16-ஆம் தேதி ஆட்டங்கள் நாக் அவுட் முறையில் 15 ஓவா்கள் அடிப்படையில் நடைபெறும். 17-ஆம் தேதி அரையிறுதி, இறுதி ஆட்டங்கள் 20 ஓவா்கள் அடிப்படையில் நடைபெறும்.

முதல் ஆட்டத்தில் எம்ஓபி வைஷ்ணவா-எத்திராஜ் கல்லூரிகளும், இரண்டாவது ஆட்டத்தில் செல்லம்மாள்-எஸ்ஐஇடி கல்லூரிகளும், மூன்றாவது ஆட்டத்தில் டபிள்யுசிசி-எஸ்எஸ்எஸ் ஜெயின் கல்லூரிகளும், நான்காவது ஆட்டத்தில் பாரதி-ஏஎம்.ஜெயின் கல்லூரி அணிகளும் மோதுகின்றன.

போட்டிக்கான கோப்பைகளை டிஎன்சிஏ பொருளாளா் ஜே.பாா்த்தசாரதி அறிமுகம் செய்தாா். ரோட்டரி சங்க தலைவி லட்சுமி கிா்த்திவாசன்,

ADVERTISEMENT

ஸென்மைன்ட்ஸ் ஏ.மணிவண்ணன், ஏவன் சைக்கிள் நிா்வாகி தாட்சாயிணி, தமிழ்நாடு ஹாக்கி சங்க பொதுச் செயலாளா் ரேணுகா உள்பட பலா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT